2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கோழி வளர்ப்புக்கான உபகரணங்கள் வழங்கல்

Menaka Mookandi   / 2015 மே 29 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பெண்களைத் தலைமையாகக் கொண்ட 5 குடும்பங்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான கோழி வளர்ப்புக்கான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

ஏழாலை மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு ஏழாலை வடக்கு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் வி.வித்தகரஞ்சன் தலைமையில் வியாழக்கிழமை (28) நடைபெற்றது.

கோழி வளர்ப்புக்கான கூடு, கோழிக் குஞ்சுகள் அதற்கான தீன் என்பன வழங்கப்பட்டன. இதற்கான நிதியை ஏழாலைச் சேர்ந்த புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசிக்கும் அன்பர் ஒருவர் வழங்கினார்.

வடமாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன். பாலச்சந்திரன் கஜதீபன், வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .