Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 மே 29 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில், பரந்தன் சிவபுரத்தில், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட விழிப்புக்குழு ஒன்றும் ஏழு பேரடங்கிய கல்விக் குழு ஒன்றும்; நேற்று வியாழக்கிழமை அமைக்கப்பட்டது.
சிவபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே இக்குழு ஏற்படுத்தப்பட்டது. இச்சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றிய அவர்,
'எமது இனத்தை அழிப்பதற்கான நடவடிக்கை மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுதொடர்பில் நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும' எனறார்.
'தமிழர்களின் கலாசாரத்தில் பெண்கள் உணர்வின் சின்னமாகவே பார்க்கப்பட்டனர். இதனை தடுப்பதற்காகவே இவ்வாறான சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது இனத்தை சிதைப்பதற்கான முயற்சிகள் மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நாங்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்;. எமது பிள்ளைகளை காப்பாற்றுகின்ற கடமையும் பொறுப்பும் எம் அனைவரிடமும் உள்ளது. நாங்கள் சட்டங்களை கையில் எடுக்க முடியாது' என்றும் அவர் தெரிவித்தார்.
சமூகத்தை சீரழிக்கும் வகையில் கஞ்சா, போதைப்பொருள், கசிப்பு பாவனைகள் அதிகரித்துள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் எமது சமூகத்தை சீரழிக்கின்றன. புங்குடுதீவில் வித்தியா, கனகராயன்குளத்தில் ஒரு சிறுமி, பரந்தன் சிவபுரத்தில் ஒரு சிறுமி, நாரந்தனையில் ஒரு சிறுமி என இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago