2025 ஜூலை 05, சனிக்கிழமை

வடமாகாணத்தில் சமாதானம் காக்கப்படுகிறது: டீ.ஐ.ஜி

Administrator   / 2015 மே 29 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாணத்தில் தற்போது 100 வீதம் சமாதானம் காக்கப்படுவதாகவும் அதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட பிரதி; பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார்.

யாழ். தலைமை பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'யுத்த காலத்தில் குற்றங்கள் செய்த குற்றவாளிகளுக்கு காட்டுச் சட்டத்தில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. நாட்டுச் சட்டத்தில் அவ்வாறு கடுமையான தண்டனை வழங்க முடியாது' என்றார்.

'காட்டுச் சட்டம் என்பது 14ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இருந்தது. எழுத்து மூலமாக இல்லாமல் பலம் வாய்ந்தவர்கள் பலம் குறைந்தவர்களை தண்டிப்பதே அந்தச் சட்டம். அதன் பிற்பாடே நாட்டில் எழுத்து மூலமான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. நாட்டிலுள்ள எழுத்துமூலமான சட்டத்தின் பிரகாரமே குற்றச்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். அந்த அதிகாரங்கள் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை ஒருவர் சந்தேகநபரே. அவரை குற்றவாளியெனக்கூற முடியாது. ஒரு குற்றம் நடைபெற்றால் அது தொடர்பில் கைது செய்யப்படுபவரை கொலை செய்ய முடியாது. அவருக்கு நீதிமன்றமே தண்டனை வழங்க முடியும். அந்த அதிகாரம் வழங்கப்பட்டவரே அந்தத் தண்டனையை வழங்க முடியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .