2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைக்க உதவி

Menaka Mookandi   / 2015 மே 31 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வீடமைப்பு அமைச்சின் நிதியின் கீழ் வீடுகளைத் திருத்தியமைப்பதற்காக குடும்பமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உதவித்திட்டம் வழங்கும் வேலைத்திட்டமொன்று தற்போது பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறித்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறுமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடமாகாண சபை உறுப்பினர் ஏ.அஸ்மின் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ். மாவட்டத்தில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்கு விஷேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பதிவுகளைக் (அ காட்களைக்) கொண்டிருக்கின்ற அனைவரும் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும். எனினும், போதியளவு விண்ணப்பங்கள் தம்மை வந்துசேரவில்லை என யாழ்ப்பாணம் பிரதேச செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வீடுகளை புனரமைப்பதற்கு கிடைத்திருக்கின்ற இவ்வரிய சந்தர்ப்பத்தினை தவறவிடாது பயன்படுத்துவது சிறப்பானது. எனவே தங்களது வீடுகள் அமைந்திருக்கின்ற கிராம அலுவலகர் ஊடாக விண்ணப்பங்களை வழங்கி குறித்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக தகவல்களையும் விபரங்களையும் தம்மிடமோ அல்லது குறித்த கிராம அலுவலகரிடமோ பெற்றுக்கொள்ள முடியும் என பொது மக்களுக்கு அறியத்தருதாகவும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.அஸ்மின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .