2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இளைஞன் மீது வாள்வெட்டு: ஒருவர் கைது

Thipaan   / 2015 மே 31 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்றுறை, நாரந்தனை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் வெள்ளிக்கிழiமை (29) இரவு அத்துமீறி நுழைந்து இளைஞனொருவனை    வாளால்  வெட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய அதேயிடத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (31) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில்     எஸ்.சசிகரன் (வயது 21) என்பவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முச்சக்கரவண்டியில் வந்த மூன்று பேர் கொண்ட குழு, இத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக உறவினர்கள், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டவரின் தந்தை மற்றும்  சகோதரன் எனவும் அவ்விருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .