2025 ஜூலை 02, புதன்கிழமை

வருமான பரிசோதகருக்கு மேலதிக கொடுப்பனவு

Princiya Dixci   / 2015 ஜூன் 02 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மானிப்பாய் உப அலுவலகத்தில் கடமையாற்றும் வருமானப் பரிசோதகருக்கு விடுமுறை நாட்களில் பணிபுரிவதற்கான மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு சபையின் நிதிக்குழு சிபார்சு செய்துள்ளதாக பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதேச சபையின் கீழ் மானிப்பாய் பட்டினம், மானிப்பாய் கிராமம், பண்டத்தரிப்பு பண்டினம் மற்றும் பண்டத்தரிப்பு கிராமம் என 4 உப அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

மானிப்பாய் பட்டின உப அலுவலகத்தில் கடமையாற்றும் வருமான பரிசோதகர் ஏனைய உபஅலுவலகங்களிலுள்ள நீதிமன்ற வேலைகளைக் கவனிப்பதாலும் அதிகமான ஆதன பெயர் மாற்று விண்ணப்பங்களை நேரடியாகப் பார்வையிட்டு அறிக்கை வழங்க வேண்டி இருப்பதாலும் அவரது வேலைப்பளு அதிகரித்துள்ளது. இதனால் அவர் மாதத்தில் 5 விடுமுறை நாட்களிலும் கடமையாற்றுகின்றார்.

இதற்கான மேலதிக கொடுப்பனவை வழங்குமாறு சபையிடம் வருமானப் பரிசோதகர் கோரியிருந்தார். கோரிக்கைக்கு அமைய மேலதிக கொடுப்பனவை நிதிக்குழு சிபார்சு செய்துள்ளது. பொதுச்சபை கூட்டத்தில் இது ஆராயப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .