Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூன் 03 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம், செல்வநாயகம் கபிலன், எம்.றொசாந்த்
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டமையை மற்றும் பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளைக் கண்டித்து, பருத்தித்துறை நகராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று பருத்தித்துறையில் புதன்கிழமை (03) நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு ஆதரவு வழங்கும் முகமாக பருத்தித்துறை நகரிலுள்ள அனைத்து கடைகளும் 1 மணித்தியாலம் மூடப்பட்டன.
பருத்தித்துறை காந்தி சிலை முன்றலிலிருந்து ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்ட பேரணி, துறைமுக வீதியில் அமைந்துள்ள சித்திவிநாயகர் ஆலயத்தில் முடிவடைந்து, அங்கு மௌனப் பிரார்த்தனை இடம்பெற்றது.
தொடர்ந்து பருத்தித்துறை மாவட்ட நீதவான் மா.கணேராசாவிடம் கையளிக்குமாறு பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி பருத்தித்துறைப் பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றத்தில் விண்ணப்பித்த போதும், அதனை நீதவான் கணேசராசா மறுத்ததுடன், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை அதனைத் தடை செய்ய முடியாது, ஆர்ப்பாட்டத்தில் குழப்பங்கள் ஏற்படாத வண்ணம் பொலிஸார் பார்க்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இதனையடுத்து, இன்றைய ஆர்ப்பாட்டமானது கலகம் அடக்கும் பொலிஸார், மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோரின் பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
01 Jul 2025