2025 ஜூலை 02, புதன்கிழமை

வாள்வெட்டில் இருவர் படுகாயம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 03 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

உடுவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (02) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவமொன்றில்  பிரதேச சபை பணியாளர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியரான தங்கவேல் கருணாகரன் (வயது 35), கூலி வேலை செய்யும் குணரத்தினம் கஜேந்திரன் (வயது 25) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.

வீட்டிலிருந்த பிரதேச சபை பணியாளரை வானில் வந்த 7 பேர் கொண்ட குழு வாளால் வெட்டிவிட்டியதுடன், சத்தம் கேட்டு ஓடிச் சென்ற அயல் வீட்டுக்காரர் மீதும் அந்தக்குழு வாளால் வெட்டியுள்ளது.

படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .