Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Gavitha / 2015 ஜூன் 03 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
வடமாகாண முதியோர் பேரவை அமைக்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (06) கைதடி அரச முதியோர் இல்ல மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி புதன்கிழமை (03) அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மாவட்ட மட்டங்களில் இயங்கி வரும் முதியோர் சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருலாளர் ஆகியோர் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு 5 மாவட்டங்களிலிருந்தும் வருகை தருபவர்களிலிருந்து மாகாண மட்ட முதியோர் பேரவை தெரிவு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சின் உயரதிகாரிகளுடன் வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், மாவட்ட சமூக சேவைகள் அலுவலர்கள், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மாகாண மட்டத்தில் முதியோர்களின் நலனை மேம்படுத்தும் பணிகள் இந்த பேரவை ஊடாக அமைச்சு இனிவரும் காலத்தில் செய்யுமெனவும் அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
01 Jul 2025