2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 04 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் நகரப் பகுதியில் பொது இடத்தில் நின்று மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் புகைப்பிடித்த இருவருக்கு தலா 1,500 ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் புதன்கிழமை (03) தீர்ப்பளித்தார்.

இருவரையும் கடந்த 2ஆம் திகதி சுன்னாகம் பொலிஸார் கைது செய்திருந்ததுடன், அவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு புதன்கிழமை (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்தே இந்த அபராதம் விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .