2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

காதலியின் கழுத்தை அறுத்த காதலனுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 ஜூன் 04 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் கைதான 20 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா, இன்று வியாழக்கிழமை (03) உத்தரவிட்டார்.

தன்னைக் காதலித்த பெண், தன்னை ஏமாற்றியதாகக்கூறி கடந்த 25ஆம் திகதி யுவதியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் யுவதியின் கழுத்தை வெட்டியதுடன், தன்னையும் வாளால் வெட்டிக் காயப்படுத்திக்கொண்டுள்ளார்.

படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இளைஞன் சிகிச்சை பெற்று புதன்கிழமை (03) வீடு திரும்பியதையடுத்து, அவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .