2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் நடைபெறும் மணல் அகழ்வு தொடர்பான முழுமையான விபரம் வேண்டும்

Gavitha   / 2015 ஜூன் 10 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறுகின்ற மணல் அகழ்வு தொடர்பான முழுமையான விபரங்களை சேகரித்து வழங்குமாறு, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற இரணைமடுக்குள அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வு கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இரணைமடுக்குளத்தின் கீழும் கனகராயன் ஆறு, பன்னங்கண்டி என பல இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் நடைபெறுகின்ற மணல் அகழ்வுகள் தொடர்பான விபரங்களைத் திரட்டி தன்னிடம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்டச் செயலர் பணித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .