2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சாரதி பயிற்சி வாகனம் மோதி வயோதிபர் பலி

Thipaan   / 2015 ஜூன் 17 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாக புதன்கிழமை (17) வீதியில் நடந்து சென்ற வயோதிபரைஇ சாரதிப் பயிற்சி நிலைய வான் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சரசாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த பேரம்பு நல்லதம்பி (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

சாரதி பயிலுநர் ஒருவர் பிறேக் பிடிப்பதற்கு பதிலாக அக்ஸலேட்டரை அழுத்தியமையால் வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வயோதிபர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .