Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 17 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நா.நவரத்தினராசா
யுத்தத்தில் உயிர்நீத்த படை வீரர்களின் தினம் யாழ்ப்பாணம் பலாலி படைத் தலைமையகத்தில் புதன்கிழமை (17) நினைவு கூரப்பட்டது.
ரணவிரு அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்;தினராக ரணவிரு அதிகார சபையின் தலைவர் அனோமா பொன்சேகா கலந்துகொண்டார்.
வரவேற்புரையை வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் நிகழ்த்தினார். யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாரதிபதி, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் யாழ்ப்பாணம் முஸ்லிம் பள்ளிவாசல் மௌலவி ஆகியோரின் ஆசியுரைகளும் இடம்பெற்றன.
இறந்த படை வீரர்களுக்கான இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ரணவிரு அதிகார சபையின் தலைவி அனோமா பொன்சேகா, வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார, யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், நினைவுரைகளை நிகழ்த்தினர்.
ரணவிரு அதிகார சபையின் தலைவர், வடமாகாண ஆளுநர், படைகளின் கட்டளைத் தளபதிகள், விமானப்படை, கடற்படை, பொலிஸ் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் ஆகியோர் வீரர்களின் நினைவு தூபியில் மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
படைவீரர்களின் ஞாபகார்த்தமாக மாவட்ட செயலகங்கள், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதம செயலாளர் அலுவலகம், வடமாகாண ஆளுநர் அலுவலகம் என்பவற்றுக்கு நினைவுப் பரிசிலாக நூல்கள் வழங்கப்பட்டன.
வடமாகாண அமைச்சர்களின் செயலாளர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
42 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
8 hours ago
9 hours ago