2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மின்சார வசதி செய்து தரப்படவேண்டும்: வலளாய் மக்கள்

Thipaan   / 2015 ஜூன் 17 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வலிகாமம் கிழக்கு வலளாய் பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் தங்களுக்கு மின்சார வசதி செய்து தரப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த வலளாய் பகுதியில் அண்மையில், மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டது.

அப்பகுதியில் மீளக்குடியமர 113 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதுடன், 25 குடும்பங்கள் தற்காலிக கொட்டில்கள் அமைத்து அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

தற்காலிக கொட்டகைகள் அருகில் பற்றைகள் வளர்ந்து காணப்படுவதுடன், முன்னர் இருந்த வீடுகள் உடைத்த கற்குவியலும் காணப்படுகின்றது.

இரவு வேளைகளில், அவற்றுக்குள் இருக்கும் விஷ ஜந்துக்கள் தற்காலிக கொட்டகைக்குள் வருகின்றமையால் தாங்கள் இரவு வேளைகளை பயத்துடன் கழிப்பதாக மக்கள் கூறினர்.

தற்காலிக கொட்டகைகளை சுற்றி மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் வலைகளை கொண்டு பாதுகாப்பு அமைத்துவிட்டே உறங்குவதாக மக்கள் தெரிவித்தனர்.

மின்சார வசதிகளும் செய்து தரப்பட்டால் தாங்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என மக்கள் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .