2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாழில் வாகனத் திருத்தகத்தில் தீ

Menaka Mookandi   / 2015 ஜூன் 18 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், நல்லூர் வீதியில் யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலைக்கு அருகிலுள்ள வாகன திருதகம் ஒன்றில் புதன்கிழமை (17) இரவு தீ விபத்து ஏற்பட்டது.

அங்கு விரைந்து சென்ற யாழ். மாநகரசபை தீயணைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

வாகன திருத்தகத்தின் களஞ்சிய அறையில் வெல்டிங் வேலை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த எரிவாயு கொள்கலன்களுக்கு தீ பரவுவதை தடுத்ததன் மூலம் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.

மின் ஒழுக்கினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .