Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 19 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணிப்பதற்கு தயாராகவுள்ளனர் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெற்கில் பணம் வாங்கினார்கள் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது தொடர்பில் மாவை விளக்கம் கேட்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (18) பதில் அனுப்பியிருந்தார். இந்த பதில் கடிதம் தொடர்பில் பதில் கூறுவதற்காக மாவை சேனாதிராஜாவினால் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்த தனக்கும் தெரியப்படுத்துமாறு முதலமைச்சர் கேட்டிருந்தார். அவருடன் இணைந்து நாங்கள் செயற்பட தயாராகவுள்ளோம்' என்றார்.
'நாங்கள் பொறுப்புள்ள இடத்தில் இருக்கின்றோம். முதலமைச்சர் கூறியதாக வந்த செய்தியில் உண்மைத் தன்மையை அறியவேண்டியதாக இருந்தது. நாங்கள் ஒன்றாக வேலை செய்யவேண்டும் என்று எண்ணத்துடன் இருக்கின்றோம்.
தேர்தல் வருங்காலங்களில் இத்தகைய செய்திகள் எங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும். 50 ஆண்டுகளுக்கு மேலாக நான் அரசியல் உள்ளேன். இதுவரையில் இவ்வாறு குற்றம் சுமத்தப்படவில்லை நாங்கள் ஒரு இணக்கத்தின் அடிப்படையில் முதலமைச்சருடன் இணைந்து செயற்படவுள்ளதாக' கூறினார்.
41 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
8 hours ago
9 hours ago