2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இந்திய வியாபாரிக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய வியாபாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் கறுப்பையா ஜீவராணி வியாழக்கிழமை (25) உத்தரவிட்டார்.

வியாபாரியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு பொதிகளில் அடங்கிய புடவைகளை அரசுடமையாக்குமாறு  நீதவான் கூறினார்.

தமிழ்நாடு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன் ஜெயராம்குமார் (வயது 27) என்ற இந்த வியாபாரி இளவாலை சீனிப்பந்தல் பகுதியில் புடவை வியாபாரம் செய்யும் போது, கடந்த மாதம் 31ஆம் திகதி இளவாலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், அவரது வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .