2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பளை பொது விளையாட்டு மைதானம் புனரமைப்பில் மோசடி தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும்

George   / 2015 ஜூன் 25 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதான புனரமைப்பில் மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியமைக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் நா.பிரபாகரன், வியாழக்கிழமை (25) தெரிவித்தார்.

நெல்சிப் திட்டத்தில் 10 மில்லியன் ரூபாய் செலவில் கீழ் புனரமைக்கப்பட்ட இந்த மைதானம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியால் புதன்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளரிடம், மைதானம் உரிய முறையில் புனரமைக்கப்படவில்லையெனவும், நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

பொது விளையாட்டு மைதானம் உரிய முறையில் புனரமைக்கப்;படவில்லை என்றும் இதற்கென ஒதுக்கப்பட்ட நிதி உரிய முறையில் செலவிடப்படாமல் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச உறுப்பினர்களால் எனக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். தவறுகள் இடம்பெற்றிருப்பின் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .