Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 26 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ். நீதிமன்றத்தின் மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 14பேருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று வெள்ளிக்கிழமை (26) அனுமதியளித்தார்.
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, யாழ.; நகரப்பகுதியில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில் 130பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பிரிவு பிரிவாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதில் நீதிமன்றம் மீது தக்குதல் மேற்கொண்டமை, சிறைச்சாலை வாகனத்தினை சேதமாக்கியமை, கடமையில் இருந்த பொலிஸாரை காயப்படுத்தியமை ஆகிய மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த 39பேருடன் மேலும் விசேட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரால் வீடியோ ஆதாரத்தினை வைத்து கைது செய்யப்பட்ட 9 பேர் இவ்வழக்குடன் இணைத்து இன்று மன்றில் ஆஐர்படுத்தப்பட்டனர்.
விசாரனையின் போது மேற்படி 14பேரும் பிணையில் செல்ல பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காததை அடுத்து நீதவான் இவர்களை பிணைமுறியில் செல்ல அனுமதித்தார்.
இன்று இவ்வழக்குடன் இணைத்துக்கொள்ளப்பட்ட 9 பேரை விட மேலும் இருவர் தலைமறைவு ஆகியுள்ளனர் என்று பொலிஸார் மன்றில் தெரிவித்ததையடுத்து அவ்விருவருக்கும் மன்றினால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் கோரிய பிணை மனு பொலிஸாரின் ஆட்சேபனையால் நீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நீதிமன்ற முன்றலில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பான புகைப்படப்பிரதிகள் மற்றும் இறுவெட்டுகளை முன்று பத்திரிகை நிறுவனங்களிடம் இருந்து பெற்று கொள்வதற்கான அனுமதியினை பொலிஸார் மன்றில் கோரினர். இதனை விசாரித்த நீதவான் குறித்த ஆவணங்களை பெறுவதற்கு அனுமதிக்கட்டளையினை வழங்கினார்.
பிணைமுறியில் சென்ற 14பேரை விட மீதி 34பேரையும் எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago