2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சமூக சேவைகள் அமைச்சின் இருநாள் செயலமர்வு

Sudharshini   / 2015 ஜூன் 27 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.தபேந்திரன்

வடமாகாணத்தில் சமூக சேவைகள் அமைச்சின் சேவைகளின் தரத்தை உயர்த்தும் முகமாக இருநாள் செயலமர்வு கண்டி பொல்கொல்லை கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் வியாழக்கிழமை (25), வெள்ளிக்கிழமை (26) ஆகிய திகதிகளில் நடைபெற்றது.

இதில் வடமாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் சேர்ந்த சமூக சேவைகள் அலுவலர்கள், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களம் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவியது.

சமூக சேவைகள் அமைச்சின் திட்டப் பணிப்பாளர் எம்.ராமமூர்த்தி, பிரதான வளவாளராக கலந்து கொண்டு செயலமர்வை வழிப்படுத்தினார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .