2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Sudharshini   / 2015 ஜூன் 29 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

கடந்த 26 ஆம் திகதி காணாமற்போன ஆழியவளை கொடுக்கா பகுதியைச் சேர்ந்த கயிலாயபிள்ளை மகேந்திரன் (வயது 59) என்பவர் ஞாயிற்றுக்கிழமை (28) வளலாய் பகுதியிலுள்ள தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 26 ஆம் திகதி வளலாய் கிழக்குப் பகுதியிலுள்ள மரண வீட்டுக்குச் சென்றிருந்த இவர், வீடு திரும்பவில்லை. இது தொடர்பில் உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையிலேயே கிணற்றிலிருந்து இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .