Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 29 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கி.பகவான்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார்.
புதுக்குடியிருப்பு மற்றும் கைதடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மேற்படி இரு சந்தேகநபர்களிடமிருந்து புலிகள் இயக்கத்தினர் பயன்படுத்தும் சீருடையொன்று, 3 தொப்பிகள், 2 ஜாக்கட்கள் என்பன மீட்கப்பட்டன.
விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்து, அதனை வைத்து புகைப்படம் எடுத்து வெளிநாட்டில் பிரஜாவுரிமையைப்பெறும் முயற்சியில் ஈடுபட்ட மேற்படி இருவரும், அப்புகைப்படங்களை பிரதியாக்க முற்பட்டபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago