Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 29 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழில் 4 மணித்தியாலயத்துக்கு ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் சி.சிவன்சுதன் தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,
யாழ். போதனா வைத்தியசாலையில் தற்கொலை முயற்சியில் அதிகமானோர் அனுமதிக்கப்படுவதற்கு, போதைபொருள் பாவனை மறைமுகமாகவும் நேரடியாகவும் செல்வாக்கு செலுத்துகின்றது.
வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அரைவாசிக்கு வாட்களுக்கு மேல் தற்கொலை முயற்சி செய்து சிகிச்சை பெறுபவர்கள் உள்ளனர். இதனால் இயற்கை நோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனிப்பதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றோம்.
வைத்தியசாலை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்களில் பலர் போதைபொருள் பாவனையால் ஏற்பட்ட நோய்களுக்கே சிகிச்சை பெறுகின்றனர். மது மற்றும் போதைபொருள் பாவனையால் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் மற்றும் வீதி விபத்துக்கள் போன்றவற்றால் ஏற்பட்ட காயங்கள் என்பவற்றுக்கே அதிகமானவர்கள் சிகிச்சை பெறுகின்றார்கள்.
வைத்தியசாலையிலுள்ள தாதியர்கள், வைத்தியர்களின் வேலைப்பளு அதிகரிப்பதனால் பிற நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்களை கவனிப்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. போதைபொருள் மற்றும் மது பாவனையால் ஏற்படும் நோய்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை பெறுபவர்களால் மருந்து வகைகள் மற்றும் வளங்கள் என்பனவும் வீண் விரயமாகின்றது.
இவை மட்டுமின்றி, சமூக, பொருளாதார, கல்வியில் கூட அவை தாக்கம் செலுத்துகின்றன. கலாச்சார அழிவுகளை கூட ஏற்படுத்துகின்றது. இலங்கையின் ஏனைய பிரதேசங்களை விட வடக்கில் அதிகமாக போதைபொருள், மது பாவனை அதிகமாக உள்ளது. அதற்கான காரணம் கண்டறியப்பட்டு அவற்றை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என கூறினார்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago