Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 01 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்கள் 30பேர் அடங்கிய குழுவினர் வடமாகாண அமைச்சர்களை வடமாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (30) சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்களாக புதிதாக நியமிக்கப்பட்டவர்களும், ஏற்கெனவே வெளிநாடுகளில் துணை தூதுவர்களாகப் பணியாற்றி தூதுவர்களாக வேறு நாடுகளுக்கு இடம்மாறி செல்ல இருப்பவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைபற்றித் தெரிந்து கொள்வதற்காக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாகவே வடக்கு அமைச்சர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமாகிய த.குருகுலராசா தலைமையில் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோருடன் வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்கள்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago