Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 01 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.குகன்
நல்லூர் உற்சவ காலத்தை முன்னிட்டு, யாழ். அறநெறி பாடசாலை மாணவர்களிடையே அறநெறி பாடசாலை முக்கியத்துவத்தையும் அதனை மேம்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாட்டில், சித்திரம், வில்லுப்பாட்டு, பேச்சாற்றல், பண்ணிசை, பஜனை, நாடகம் எழுத்தாற்றல், பரதநாட்டியம் ஆகிய ஆக்கத் திறன்களை வெளிக்கொணர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்படி ஆக்கத் திறன்களை வெளிக் கொண்டு வருவதற்கான விதிமுறைகள் விண்ணப்பப்படிவம் என்பவை தபால் மூலம் அனைத்து அறநெறிப் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படவேண்டும்.
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அறநெறிப் பாடசாலை மாணவர்களும் பங்குபற்றித் தமது ஆக்கத்திறனை வெளிப்படுத்தவும் அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே ஒரு எழுச்சியையும் உத்வேகத்தை ஏற்படுத்தவும் இந்த வாய்ப்பு இன்னிமையாததாகும்.
அனைத்து ஆலய நிர்வாக சபையினரும் இந்து நிறுவனங்களும் பதிவிலுள்ள அறநெறிப் பாடசாலைக்கு விண்ணப்பப் படிவங்களையும் விதிமுறைகளையும் வழங்கிப் பங்குபற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago