2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கஞ்சா பாவனையை கட்டுப்படுத்த ஆளுமை விருத்தி செயலமர்வு

Administrator   / 2015 ஜூலை 01 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்துவரும் கஞ்சா கடத்தல் மற்றும் பாவனையைக் கட்டுப்படுத்த மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் ஆளுமை விருத்திச் செயலமர்வுகளை நடத்தவுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி சில்வா, புதன்கிழமை (01) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

ஒவ்வொரு கிராம மட்டமாக ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு வடமாகாண சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது. 

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க அவர்களின் வழிகாட்டலில் இந்த ஆளுமை விருந்தி செயலமர்வு முன்னெடுக்கப்படவுள்ளது. எமது பொலிஸ் பிரிவுக்குடு;பட்ட 15 கிராமஅலுவலர் பிரிவுகளிலும் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்படும்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் துறையூடாக இடம்பெற்று வரும் கஞ்சாக் கடத்தலினை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இளைஞர் மத்தியில் பெருகி வரும் கஞ்சா பாவனைக்கு இளவாலை பகுதியூடாக கஞ்சா யாழ்ப்பாணத்துக்கு கடத்தப்படுகின்றமையே காரணம் என பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

இதற்காக இளவாலை பகுதியில் பொலிஸ் ரோந்து பணிகளை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் கிடைக்கும் சிறிய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கடத்தலில் ஈடுபடுகின்றனர். இதனை முற்றாக நிறுத்துவோம்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம், காளையடி பகுதியிலுள்ள இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் பல குடும்ப பிணக்குகள் ஏற்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு வருகின்றனர். இதனை அனுபவ வாயிலாக அறிந்துள்ளோம்.

பனிப்புலம் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியொருவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தோம். சந்தேகநபர் சார்பாக எந்தச் சட்டத்தரணியும் ஆஜராக முன்வரவில்லை. அவரது குடும்பத்தினர் கொழும்பில் இருந்து சட்டத்தரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளுடன் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை வழங்க பொலிஸார் மறுப்புத் தெரிவிப்பார்கள் என பொறுப்பதிகாரி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .