2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கடலாமை வளர்த்தவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 ஜூலை 01 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் வீட்டிலுள்ள தொட்டிக்குள் வைத்து 2 கடலாமைகளை வளர்த்து வந்த 21 வயதுடைய இளைஞனுக்கு 3,000 ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் செவ்வாய்க்கிழமை (30) தீர்ப்பளித்தார்.

இளைஞனிடமிருந்து மீட்கப்பட்ட கடலாமைகளை யாழ். நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் கடலில் விடுமாறு நீதவான் பொலிஸாருக்கு பணித்தார்.

கடலாமைகளை கடலில் பிடித்துக் கொண்டு வந்த இந்த இளைஞன் வீட்டில் உள்ள தொட்டியில் வைத்து வளர்த்துள்ளான். இது தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் வீட்டுக்குச் சென்று கடலாமைகளை மீட்டதுடன் இளைஞனையும் கைது செய்தனர்.

கடலாமையை வளர்த்து இறைச்சியாக்கும் நோக்குடன் அதனை வளர்த்ததாக இளைஞன் கூறியதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .