Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 01 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கோப்பாய், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (30) இரவு கைது செய்யப்பட்ட ஐவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் கூறினார்.
கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து இருபாலை, கல்வியங்காடு, புலோலி மேற்கு, வத்தளை ஆகிய பகுதிகளில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, மின்மானியை சேதப்படுத்தி அதன் ஓட்டத்தைக் குறைத்த ஒருவரும், பிரதான வடத்திலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் பெற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக அந்தந்த நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
4 minute ago
5 minute ago
6 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 minute ago
6 minute ago
15 minute ago