Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 01 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக்கின்றமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் சமூகத்தில் இன்று உருவாகியுள்ளது. சமுதாயம் வளரவேண்டுமாயின் மாணவர்கள் இவற்றிலிருந்து விடுபட்டு தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
மானிப்பாய் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கட்டத்திறப்பும் கல்லூரி முதல்வர் எஸ்.சிவநேஸ்வரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், 'மாணவர்கள் மாணவர்களாக வாழ வேண்டும். சமூகத்தை சீர்திருத்த முன்வர வேண்டும். யாழ்;ப்பாணத்திலுள்ள அகதிகள் மீள்குடியேற வேண்டும். தமிழரது சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு பல திட்டங்களினை வைத்த அரசு, பல சலுகைகளினை உங்களுக்கு வழங்குகின்றது' என்றார்.
'மாணவர்கள் ஆசிரியர்களினை கௌரவமாக நடத்த வேண்டும். உங்களது தாய், தந்தையரினை போன்று மதிக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களினை தமது பிள்ளைகள் என்ற ரீதியில் செயற்படவேண்டும். எமது சூழலில் தாய், தந்தையரை இழந்த பல மாணவர்கள் காணப்படுகின்றனர். அவர்களை கௌரவத்துடன் நடத்த வேண்டும்.
பாடசாலைகளின் வளர்ச்சியை ஒவ்வொரு மனிதர்களது வளர்ச்சியாகவும் கொள்ள முடியும். பாடசாலை வாழ்வில் 75 வீதமான காலத்தினை செலவு செய்கின்ற மாணவர்கள் நல்ல பிரஜைகளாக உருவாகின்றனர்' என்றார்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago