2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மகேஸ்வரி நிதியம் தொடர்பில் பொய்ப் புகார்: டக்ளஸ்

Menaka Mookandi   / 2015 ஜூலை 02 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

'மகேஸ்வரி நிதியம் சம்பந்தமாக இலஞ்;ச ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் உண்மைக்கு புறம்பான பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இடம்பெறும் விசாரணையின்போது உண்மைகள் பலவற்றை உரியவர்கள் அறிந்துள்ளார்கள்' என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று வியாழக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் மூலம்; மகேஸ்வரி நிதியம் சம்பந்தமாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழவில் முறையிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் விசாரணையின்போது, பல உண்மைகளை அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.

பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்தவர்களுக்கு எல்லாமே பொய்யாகவே தெரியும். மகேஸ்வரி நிதியம் சம்பந்தமான விசாரணை முடியும் போது உண்மைத் தன்மைகள் வெளிவரும்' என டக்ளஸ் மேலும் கூறினார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கீழ் இயங்கும் மகேஸ்வரி நிதியம், தன் கீழ் மணல் ஏற்றி இறக்குவதற்கு யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்தின் பாரவூர்திகளை பயன்படுத்தியிருந்ததுடன், அதற்காக வைப்புப்பணம் மற்றும் சேமப்பணம் என சுமார் 20 மில்லியன் ரூபாய் பணத்தை பெற்றிருந்ததாகவும் அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனக்கூறியே சுமந்திரனால், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .