Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 02 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 7 தொகுதி வலைகளை வெட்டியெடுத்த கற்கோவளம் மீனவர்கள், அவற்றை வியாழக்கிழமை (02) தம்மிடம் ஒப்படைத்ததாக பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் நுவான் பி.டந்த நாராயண தெரிவித்தார்.
பருத்தித்துறைக் கடலில் கற்கோவளம் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, றோலர்களின் மூலம் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்துள்ளனர். இதனை அவதானித்த பருத்தித்துறை மீனவர்கள், அவர்களின் வலைகளை அறுத்து எடுத்ததுடன், அவர்கள் மீது கல் வீசித் துரத்தியுள்ளனர்.
தம்மிடம் மீனவர்கள் ஒப்படைத்த வலைகளை பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் பாரப்படுத்தவுள்ளதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago