2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

முன்விளக்கு இல்லாத மோட்டார் சைக்கிள் விபத்து

George   / 2015 ஜூலை 03 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொது நூலகத்துக்கு முன்பாகவுள்ள வீதியில் வியாழக்கிழமை (02) இரவு சென்றுகொண்டிருந்தவரை மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தவரும் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

நுணாவில் மேற்கைச் சேர்ந்த வைத்திலிங்கம் வைத்தீஸ்வரன் (வயது 40), உதயசூரியன் வீதியைச் சேர்ந்த அருளப்பு சுதாகரன் (வயது 27) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளுக்கு முன்விளக்குகள் இல்லையெனவும் இதனால் எதிரே நடந்து வந்தவரை மோதியுள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .