2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

180 கிலோகிராம் கஞ்சாவுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 ஜூலை 03 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன், ற.றஜீவன்

வடமராட்சி கிழக்கு, அம்மன் கோவில் பகுதியில் 180 கிலோகிராம் நிறையுடைய கஞ்சாவுடன் வியாழக்கிழமை (02) அதிகாலை கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் மாணிக்கராசா கணேசராசா வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டார்.

கடல் மார்க்கமாக கேரளா கஞ்சாவை கொண்டு வந்து இறக்கிக் கொண்டு இருக்கும் போதே நால்வரையும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர்.

வடமராட்சி - செம்பியன்பற்று, கொழும்பு - ஒருகொடவத்தை, மட்டக்களப்பு - ஏறாவூர் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரிடமும் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே அவர் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .