Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 03 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
அபிவிருத்தியும், அரசியல் உரிமையும் எமது இரு கண்களைப் போன்றது. அதனை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'முன்னைய காலங்களில் அபிவிருத்திப் பணிகளில் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விசேட நிதியுதவி மூலம் அதிக நிதிகளை ஒதுக்கீடு செய்து மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நாம் கடுமையாக உழைத்திருக்கிறோம்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அபிவிருத்தியில் பின்நிற்க முடியாது. உரிமைகளையும் நாம் விட்டுக்கொடுக்க முடியாது
நாட்டில் கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தின் போது மக்கள் பல சொத்து இழப்புகள் மற்றும் உயிரிழப்புகள் என்பவற்றை சந்தித்துள்ளனர்.
இந்த இழப்புகளை ஐந்து வருடத்தில் ஈடுசெய்வதென்பது மிகவும் கடினமான பணியாகும். மீள்குடியேற்றத்தின் பின்னரான காலப்பகுதியில் எமது கட்சி பாதிக்கப்பட்ட மக்களைத் தேடிச்சென்று அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து அதற்கு தீர்வுகண்டுள்ளது.
முழுமையாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பினும், ஓரளவு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நிரந்தர வீடுகள், வீதி புனரமைப்பு, நிரந்தர தொழில்வாய்ப்பு மற்றும் வாழ்வாதார உதவிகள் உள்ளிட்டவை தேவைப்படுகின்றன.
தேவைகள் உள்ள சமூகமாகவே மக்கள் உள்ளனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த அபிவிருத்திப் பணிகளை சீரான முறையில் வழிநடத்தக்கூடிய நேர்மையான, அர்ப்பணமான அரசியல் தலைமைகள் செயற்பட்டாலே அதனை சிறப்பான முறையில் கொண்டுசெல்ல முடியும் என்றார்.
தமிழ் மக்கள் இவ்வளவு காலமும் தமது வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய, பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய அரசியலை இழந்திருக்கின்றனர். தமிழ் மக்களுக்கு வழிகாட்டிய தமிழ் தலைமைகள் மக்களை சரியான பாதையில் வழிநடத்தியிருந்தால் அவர்கள் இழப்புகளை சந்தித்திருக்கமாட்டார்கள். இவர்களினால் தான் மக்கள் அவலத்தை எதிர்கொண்டனர்.
எமது மக்களின் விடுதலைக்காக நானும் இன்னும் ஆயிரம் போராளிகளும் ஆயுதமேந்தி போராடினோம். இதனால், நான் இலங்கை சிறப்பு அதிரடிப்படையினருடன் நேருக்கு நேர் மோதியதில் காயங்களுக்கு உட்பட்டேன். ஆனால், இளைஞர்களே புறப்படுங்கள் நாளை தமிழீழம் என எமது இரத்தத்தை சூடாக்கவைத்து எம்மை ஆயுதமேந்தி போராட வைத்த தமிழ் தலைவர்கள், மக்களின் விடுதலைக்காக வியர்வைகூட சிந்தவில்லை. அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். மக்களுக்கு ஏற்பட்ட வலி எனக்கும் இருக்கின்றது.
துன்பத்தில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக அரசியல்வாதியாக அன்றி, அரசியல் போராளிகளாக நாம் செயற்படுகின்ற காரணத்தினாலேயே மக்களின் தேவைகளை தேடிச் சென்று தீர்ப்பதற்கு அர்ப்பணமாக உழைத்துவருகின்றோம்'. இது அனைத்து அரசியல்வாதிகளினதும் கடமையாகும் என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago