2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'சேதன விவசாய முறை பூகோள ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது'

George   / 2015 ஜூலை 03 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

உணவு, சுற்றுச்சூழல், சுகாதார பாதுகாப்புகளுக்கு சேதன விவசாய முறை அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது. இது ஒரு புலமைசார் கோட்பாட்டு விடயமாக இல்லாது வாழ்வியலுடன் தொடர்புடையதாகவும் காணப்படுகின்றது. சேதனப்பசளைப் பயன்பாடு என்பது இன்று பூகோள ரீதியாக முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது என வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார தெரிவித்தார்.

சேதனப் பசளைப் பயன்பாடு தொடர்பில் யாழ்.பொது நூலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற கலந்துரையாடலில் தலைமையுரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

சேதனப் பசளைப் பயன்பாடு என்பது வாழ்வியலுடன் தொடர்புடையது ஆகும். இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

மாகாண கட்டமைப்புக்கள், மத்திய கட்டமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்புக்கள் என்ற அனைவரும் கூட்டிணைந்து சேதனப் பசளைப் பயன்பாட்டை செயற்பட வேண்டிய தேவையும் அவசியம் உள்ளது.

வடக்கு - தெற்கு நல்லுறவை வளர்த்தல் என்ற விடயத்திலும் கூட இது ஒரு முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இந்த சேதன விவசாய முறைமையானது யாழ்ப்பாணத்து மக்களுக்கு வாழ்வை திரும்ப வழங்கும் நடவடிக்கையாக காணப்படுகின்றது

கடந்த காலத்தில் இரசாயனப் பசளை பயன்பாட்டின் மூலம் பெருமளவான தரைக்கீழ் நீர் பழுதடைந்துள்ளது. நாம் மீண்டும் இரசாயன விவசாய முறையில் இருந்து விடுபட்டு சேதன விவசாய முறைக்கு மீள வருவதன் மூலம் மீண்டும் நல்ல குடிநீரைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும் என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .