2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மாணவர்களுக்கு மதனமோதகம் விற்றவர் கைது

Thipaan   / 2015 ஜூலை 04 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காங்கேசன்துறை வீதியிலுள்ள மருந்தகமொன்றில் மதன மோதகம் என்னும் போதைப் பொருளை மாணவர்களுக்கு விற்பனை செய்த ஒருவரை  வியாழக்கிழமை (02) கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

5ஆம் வட்டாரம் மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த கடைக்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 638 கிராம் நிறையுடைய மதனமோத உருண்டைகளை கைப்பற்றியதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .