Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 04 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
தாவடி பிள்ளையார் கோயில் பகுதியில் போதை லேகிய விற்பனையில் ஈடுபட்ட நபரை வெள்ளிக்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.வீ.எல்.துஸ்மந்த தெரிவித்தார்.
இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சிவில் உடையில் சென்ற பொலிஸார், தாமும் லேகியம் வாங்குவது போல் பாவனை செய்து சந்தேக நபரை கைது செய்ததாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் சந்தேகநபரின் உடமையில் இருந்து 20 லேகிய உருண்டைகளினை இதன் போது பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .