2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

George   / 2015 ஜூலை 06 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ந.நவரத்தினராசா

பளைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை திங்கட்கிழமை(06) அதிகாலை கட்டுவன் கூறைமுனைப் பகுதியில் வைத்து கைது செய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தநபர், அப்பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.என்.எஸ் கஸ்தூரியாராட்சியின் வழிகாட்டலில் உதவி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் சென்ற குழுவினர் சந்தேக நபரை கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .