Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 06 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் 285 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட பதில் நீதவான் எஸ்.சுப்பிரமணியம், திங்கட்கிழமை (06) உத்தரவிட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை(05) பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் வைத்து புத்தளம் பொலிஸ் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார், ஹெரோயின் பொருளினை வாங்குவது போல் பாசங்கு செய்து மேற்படி பெண்ணை கைது செய்திருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (03) யாழ்ப்பாணத்தில் இருந்து 693 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொழும்புக்கு கொண்டு சென்ற பண்டத்தரிப்பு மற்றும் கொழும்பு பொரளை பகுதியினை சேர்ந்த இருவரை புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து புத்தளம் போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கைதான இருவரிடமும் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தில் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் மேற்படி பெண்னை ஞாயிற்றுக்கிழமை (05) ஞாயிற்றுகிழமை கைது செய்திருந்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரையும் கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago