Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 08 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், அஅவர் பேசுகின்ற நல்லாட்சிக்கு அர்த்தம் இல்லாது போய்விடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (07) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
'மஹிந்த ராஜபக்ஷ மீது பல்வேறுபட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவரது குடும்ப அங்கத்தவர்களான மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் மீதும் ஊழல் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான ஒருவருக்கு தற்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனா நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்பதுக்கு இடம் கொடுப்பாராயின் அவர் பேசுகின்ற நல்லாட்சி என்பதற்கு அர்த்தம் இல்லாது போய்விடும்.
அத்துடன் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கு நல்லாட்சியை உருவாக்குவேன் என்று கூறியது ஒரு ஏமாற்று வேலையாக மாறும். அதேவேளை அந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி பெருபான்மையான ஆசானங்களை கைப்பற்றா விட்டால் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்ற நிலை கூட ஏற்படலாம்.
இவ்வாறான நிலையில் நாம் தற்போது எந்த தீர்மானத்திற்கும் வர முடியாது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் எவ்வாறு அமைய போகின்றது. மஹிந்த ராஜபக்ஷ பிரிந்து போட்டியிட போகின்றாரா? அல்லது மைத்திரி பால சிறிசேனா போட்டியிட வாய்ப்பு வழங்க போகின்றாரா? ஐக்கிய தேசிய கட்சிக்கு எவ்வளவு ஆசனங்கள் கிடைக்க பெற போகின்றது?.
இன்று இருப்பது போல மைத்திரி பால சிறிசேனாவும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து ஆட்சி அமைப்பார்களா? தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லது ஏனைய சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி ஆட்சி அமையுமா? போன்ற பல கேள்விகள் உள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை யாருடைய ஆட்சி அதிகாரங்களிலும் பங்குபெற்றுவது இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம். சில வேளைகளில் அந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்பட்டால் அது தொடர்பில் அப்போது முடிவெடுப்போம்' என மேலும் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago