Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 08 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக புதன்கிழமை (08) வரையிலும் ஆறு அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொண்டு உள்ளதாகவும், இரண்டு சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளதாகவும் யாழ்.மாவட்ட உதவி தேர்தல் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்யும் கால எல்லை எதிர்வரும் 13ஆம் திகதி நண்பகலுடன் முடிவடைகின்றன.
அந்நிலையில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஆறு அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்பபடிவங்களை உதவி தேர்தல் ஆணையாளர் பணிமையில் பெற்றுள்ளனர்.
அதில் ஒரு அரசியல் கட்சியே 08ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. ஏனைய கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
அதேவேளை இரண்டு சுயேட்சை கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதாக யாழ் உதவி தேர்தல் ஆணையாளர் பணிமனையில் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர் என யாழ் மாவட்ட உதவி தேர்தல் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago