Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 08 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நாடாளுமன்ற தேர்தலில் மேல் மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவது தொடர்பில் மனோ கணேசன் தலைமையிலான கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை புதன்கிழமை (08) சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எம்மிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் மனோகணேசன் தலைமையிலான கூட்டமைப்புடன் நாங்கள் பேச்சுக்கள் நடாத்தியுள்ளோம். ஏனெனில் அவர்கள் எமது நட்பு சக்தி' என்றார்.
கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் போன்ற இடங்களில் நாங்கள் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளை பெறலாம். கொழும்பில் போட்டியிட்டால் எமக்கு நிச்சயம் ஒரு ஆசனம் கிடைக்கும்.
மலையக மக்களின் பிரதிநிதிகள் தங்களுடைய வேட்பாளர்களை நிறுத்துகின்ற போது அவர்களுடன் பேசி ஒரு முடிவை எடுக்க தீர்மானித்துள்ளோம். சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கொழும்பில் சந்தித்து அது தொடர்பில் பேச்சுக்களை நடாத்தியுள்ளனர்' என தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago