Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 17 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய ஊழியர்கள் எந்த வகையான முன்னறிவித்தலும் இன்றி தாம் பணி நிறுத்தம் செய்யப்பட்டதாக தெரிவித்து வெள்ளிக்கிழமை (17) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக குறிப்பிட்ட ஊழியர்கள் 35பேர் சிற்றூழியர்களாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றி வந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை (16) எந்த வகையான முன்னறிவித்தலும் இன்றி வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுடைய பணிப்பகிஸ்கரிப்பைத் தொடர்ந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினாகளான தர்மலிங்கம் சித்தார்தன், பா.கஜதீபன், அனந்தி சசிதரன் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர், தாம் இது சம்பந்தமான நடவடிக்கைகளை எடுப்பதாக ஊழியர்களுக்கு தெரிவித்தனர்.
இதேவேளை, வட மாகாண சுகாதார அமைச்சர், தொலைபேசி மூலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுடன் கதைத்தபோதிலும் ஆக்கபூர்வமான பதில் எதனையும் வழங்க முன்வராத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
15 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago