Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 17 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய சாரதிகள் ஐவருக்கு 46,000 ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி வியாழக்கிழமை (16) உத்தரவிட்டார்.
அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் தாக்கல் செய்த ஐந்து வழக்குகளும் தனித்தனியாக வியாழக்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சாரதி அனுமதிபத்திரம் இன்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய பருத்தித்துறை தும்பளை பகுதியினை சேர்ந்த நபருக்கு 11,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன், பொலிஸாரின் சமிக்கையை மீறி சென்றமை, சாரதி அனுமதிபத்திரம் இன்றி குடிபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய சிறுப்பிட்டி நீர்வேலி பகுதியினை சேர்ந்த ஓட்டுனருக்கு 12,000 ரூபாயும், விபத்தினை தடுக்க தவறியமை, அபாயகரமான முறையில் வாகனம் செலுத்திய புத்தூர் மேற்கு பகுதியினை சேர்ந்த சாரதிக்கு 7,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், சாரதி அனுமதிபத்திரம் இன்றி, குடிபோதையில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய நீர்வேலி வடக்கு பகுதியினை சேர்ந்த ஓட்டுனருக்கு 11,000 ரூபாயும், கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தினை தடுக்க தவறிய கைதடி பகுதியினை சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு 5,000 ரூபாயும் அபராதமாக விதித்து மல்லாகம் நீதவான் கறுப்பையா ஜீவராணி தீர்ப்பளித்தார்.
9 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
42 minute ago