2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அரசியல் கைதிகளின் உறவினர்களை சந்தித்த கிராமிய அமைச்சர்

Menaka Mookandi   / 2015 ஜூலை 24 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, நடராசா கிருஸ்ணகுமார்

சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களை வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் வியாழக்கிழமை (23) சந்தித்துக் கலந்துரையாடினார்.

கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட மேற்படி குடும்பங்களை சந்தித்து அவர்களது வாழ்வாதாரம் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் கேட்டறிந்தார்.

சந்திப்பின் போது கருத்துக்கூறிய அமைச்சர்,

அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஒரு நிலைக்கு கொண்டு வருவோம். வடமாகாணம் முழுவதும் உள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்கவுள்ளோம்.

ஏற்கனவே 3 தடவைகள் பதிவு செய்வதற்கான கால நீடிப்பு வழங்கப்பட்டும், இதுவரையில் பதிவு செய்யாமல் இருக்கும் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் விரைவாக, தமது பதிவுகளை தங்கள் பகுதி மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் அல்லது கிராம அபிவிருத்தி திணைக்களம் ஊடாக அல்லது அமைச்சின் செயலாளர் அலுவலகம் ஊடாக பதிவு செய்து கொள்ள முடியும்.

அடுத்த கட்டமாக இத்திட்டத்தின் கீழ் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் பிள்ளைகளை இழந்தவர்களின் குடும்பங்களுக்கான செயற்றிட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .