Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூலை 27 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
காணாமல் போய், 28 நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி உதயகுமார் யர்ஷிகா, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளது என கிளிநொச்சி ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி மாலை 4 மணியிலிருந்து காணாமற்போன மேற்படி சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (27) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் சடலம், சிறுமி காணாமற்போன இடத்திலிருந்து 5 கிலோமீற்;றர் தொலைவிலுள்ள பொறிக்கடவை என்னுமிடத்திலுள்ள வயல் வெளியிலிருந்து கடந்த 19ஆம் திகதி, உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.
அச்சடலத்துடன் சிறுமி காணாமற்போகும் போது அணிந்திருந்த ஆடைகள், காலணி என்பனவும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலம், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட வைத்திய நிபுணர் குழுவால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, அச்சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சிறுமியை வாய்க்கால்வரை அழைத்துச்சென்று விட்டதாக கூறப்படும் 14 வயதுடைய சிறுவனை (பெரியம்மாவின் மகன்) கைது செய்வதற்கு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்த பொலிஸார், அச்சிறுவனை கடந்த 23ஆம் திகதி கைது செய்து 24ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், நீதவானின் உத்தரவுக்கிணங்க தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை இன்று திங்கட்கிழமை மன்றில் சமர்ப்பிக்கவுள்ள அதேவேளை, மேற்படி சிறுவனையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மேலும் கூறினர்.
சிறுமி காணாமற்போனமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள், தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் சிறுமியின் உறவினர்கள் சிறுமியை காட்டேறி கடத்தியிருக்கலாம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
40 minute ago