2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கைகலப்பில் சாரதியும் நடத்துநரும் காயம்

Thipaan   / 2015 ஜூலை 30 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

தனியார் பஸ் சேவையினருக்கும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலையைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் புதன்கிழமை (29) மாலை இடம்பெற்ற கைகலப்பில் பருத்தித்துறை சாலையைச் சேர்ந்த சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் காயங்களுக்குள்ளாகியதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைகலப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து விசாரணை செய்து வருவதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சாரதி மற்றும் தனியார் பஸ் சாரதி ஆகியோர் போட்டி போட்டு பஸ்களை செலுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, இரண்டு தரப்பினரும் பருத்தித்துறை பஸ் நிலையத்தை வந்தடைந்ததும் இரண்டு தரப்பினரும் முரண்பட்டுள்ளனர். முரண்பாடு கைகலப்பாக மாறியுள்ளது. இதிலேயே சாரதியும் நடத்துனரும் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து அவ்விடத்துக்குச் சென்ற பருத்தித்துறை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இரண்டு தரப்பினரையும் கைது செய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .