2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

3 பிள்ளைகளின் தந்தை கொலை

Menaka Mookandi   / 2015 ஜூலை 31 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன், செல்வநாயகம் கபிலன்

யாழ்., துன்னாலை, குடவத்தை பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தையொருவர் வியாழக்கிழமை (33) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த பிரசாந்த் துரைசிங்கம் (வயது ) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரும் அவரது உறவினரும் மதுபோதையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். வாய்த்தகர்க்கம் முற்றியதையடுத்து உறவினர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதன்போது காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொலை செய்தவர் தலைமறைவாகியுள்ளார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .