2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பனைமரக்குற்றிகளை கொண்டு சென்றவர்கள் கைது

Thipaan   / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை சமரபாகு பகுதியில், அனுமதியின்றி மூன்று பனைமரங்களைத் தறித்து, அதன் குற்றிகளை உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்ற இருவரை வெள்ளிக்கிழமை (31) மாலை கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி ரோந்தில் ஈடுபட்ட பொலிஸார், குறித்த உழவு இயந்திரத்தை மறித்து சோதனையிட்ட போது, அனுமதி இன்றி பனைமரங்களை தறித்துக் கொண்டு சென்றமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதுடன், உழவு இயந்திரத்தினை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

கைதான இருரையும் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .